HOW TO MAKE PEPPER RASAM / மிலகு ரசம் செய்வது எப்படி?

HOW TO MAKE PEPPER RASAM / மிலகு ரசம் செய்வது எப்படி? தேவையானபொருள்கள் : 1.புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு 2. மிளகுப் பொடி - 2 1/2 தேக்கரண்டி 3. துவரம்பருப்பு - 6 மேசைக்கரண்டி 4. பெருங்காயம் - ஒரு சிறு துண்டு 5. உப்பு - தேவையான அளவு 6. தக்காளி - சிறியது ஒன்று 7. கடுகு - ஒரு தேக்கரண்டி 8. நெய் - 2 தேக்கரண்டி 9. கறிவேப்பிலை - 2 கொத்து செய்முறை: 1. புளியை சற்று வெதுவெதுப்பான நீரில் ஊறப் போடவும். மிளகை லேசாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். துவரம்பருப்பை சிறிது மஞ்சள் பொடி சேர்த்து வேக விடவும். 2. 1/2 கப் நீரில் புளியைக் கரைத்து ஒரு காப்பர் பாட்டம் பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விடவும் . 3. அதில் பெருங்காயம், தேவையான உப்பு, மிளகுப் பொடி, சிறு துண்டங்களாக நறுக்கிய தக்காளி சேர்த்து கொதிக்க விடவும். 4 . நன்கு புளி வாசனை போய் கொதித்து ஒரு கப்பாக குறைந்ததும், வெந்த துவரம் பருப்பை நீரில் கரைத்து 1 1/2 கப் அளவுக்...