HOW TO MAKE CAKE IN 5 MINUTES | 5 நிமிடத்தில் கேக் செய்வது எப்படி ?

 HOW TO MAKE CAKE IN 5 MINUTES

 5 நிமிடத்தில் கேக் செய்வது எப்படி


தேவையான பொருள்கள்: 

1. சீனி - ஒரு கப்

2. பால் - ஒரு கப்

3. மைதா - ஒன்றரை கப்

4. கொக்கோ பவுடர் - முக்கால் கப்

5. பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி

6. வெனிலா எக்ஸ்ட்ராக்ட் - ஒரு தேக்கரண்டி

7. ஆயில் - ஒரு தேக்கரண்டி

8. எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி



செய்முறை: 

1. தேவையானவற்றை தயாராக வைக்கவும்.


2. அரிசிக்கு உபயோகிக்கும் கப்பை அளவாக

எடுத்துள்ளேன்.


3. ரூம் டெம்ப்பரேச்சரிலிருக்கும் பாலில் சீனியைப்

போட்டு நன்றாக கரைக்கவும்.


4 . சல்லடை அல்லது வடிகட்டியில் மைதா, கொக்கோ பவுடர், பேக்கிங் பவுடரை சலித்து பாலில் சேர்க்கவும்.


5. நன்றாக கலந்துவிட்டு வெனிலா எக்ஸ்ட்ராக்ட்,

ஆயில் சேர்த்து கலக்கவும்.


6 . பின் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.


7. (எலுமிச்சை சாறு, பேக்கிங் பவுடருடன் சேர்ந்து

நல்ல சாஃப்ட்னஸ் கிடைக்கும்).


8 . இந்த கலவையை மைக்ரோவேவ் பாத்திரத்தில்

ஊற்றவும்.


9 .பின் மைக்ரோவேவில் வைத்து ஹையில் 5

நிமிடங்கள் வேக விடவும்.


10 . அவரவர் மைக்ரோவேவிற்கு தகுந்தாற்போல்

பார்த்துக் கொள்ளவும்.


11. மேலே சரியாக வேகவில்லையெனில் மீண்டு

ஒரு நிமிடம் வேக வைக்கவும்.


12. சுவையான, சூப்பர் ஸ்பாஞ்சி கேக் தயார்.


13. மேலே சாக்லெட் ஊற்றி அலங்கரித்து பரிமாறலாம்.


14 . சாக்லெட் ஊற்றாமல் அப்படியே சாப்பிடலாம்.



Comments

Popular posts from this blog

Bizleads Automation Summit: How to Automate Your Business for Super Affiliate Success

Tricking the EcoATM in 2022: The Ultimate Guide

How Important is SEO for Business in 2023? - Chat GPT AI Report