HOW TO MAKE ANDHIRA SAMBAR / ஆந்திரா சாம்பார் செய்வது எப்படி/ IN TAMIL
HOW TO MAKE ANDHIRA SAMBAR /
ஆந்திரா சாம்பார் செய்வது எப்படி / IN TAMIL
தேவையான பொருள்கள்:
1. துவரம் பருப்பு - ஒரு கப்
2. தக்காளி - 3
3. சின்ன வெங்காயம் - 8
4. பச்சை மிளகாய் - 8
5. வர மிளகாய் - 4
6. கடுகு, சீரகம், உளுந்து, கடலைபருப்பு - ஒரு
தேக்கரண்டி
7. பூண்டு - 1
8. சாம்பார் பொடி - 3 தேக்கரண்டி
9. உப்பு - தேவைக்கு
10. மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
11 . சீரகத்தூள் - அரை கரண்டி
12. மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
13. புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
14. கேரட் - 2
15. கத்திரிக்காய் - 4
16. உருளை - ஒன்று
17. கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை:
1. முதலில் மேற் சொன்ன பொருட்கள்
அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக்
கொள்ளவும்.
2. பருப்பில் தக்காளி, பச்சை மிளகாய், பாதி
வெள்ளை பூண்டு, மஞ்சள் தூள், சீரகத்தூள் சேர்த்து ,3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
3 . பின்னர் காய்கறிகள், சாம்பார் பொடி, புளி
கரைசல் சேர்த்து ஒரு விசிலுக்கு வைக்கவும்.
4. தனியாக வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், உளுந்து, கடலைபருப்பு, பூண்டு, பட்ட மிளகாய் தாளிக்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கி பொன்னிறமானதும் மிளகாய் தூளும் சேர்த்து கிளறவும்.
5. அதை சாம்பாரில் கொட்டி 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
6. சுவையான ஆந்திர சாம்பார் ரெடி.
Comments
Post a Comment