HOW TO MAKE FRIED CHILLY BAROTTA/பிரைடு சில்லி பரேட்டா செய்வது எப்படி /IIN TAMIL
HOW TO MAKE FRIED CHILLY BAROTTA/
பிரைடு சில்லி பரேட்டா செய்வது எப்படி ?
தேவையான பொருள்கள்:
1.பரோட்டா - 4(சுட்டது)
2. வெங்காயம் - ஒன்று
3. சிக் பீஸ் - 1/2 கப்
4. இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
5. பச்சை மிளகாய் - 2
6. மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
7. கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
8. கேரட் - ஒன்று
9. பீன்ஸ் - 15
10. குடைமிளகாய் - ஒன்று
11. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1/4 கரண்டி
12. உப்பு - தேவையான அளவு
செய்முறை
1. முதலில் சில்லி பரோட்டா செய்ய தேவையான
அனைத்து பொருட்களையும் தயார் நிலையில்
எடுத்து வைத்துக் கொள்ளவும்.
2. பரோட்டாவை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி
வைத்துக் கொள்ளவும். வெங்காயம், கேரட், பீன்ஸ், குடைமிளகாய், பச்சை மிளகாய் எல்லாவற்றையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
3. வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய்
ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும்
வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
4. வெங்காயம் முக்கால் பதம் வெந்ததும் பச்சை
மிளகாய், இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
5. பச்சை வாசனை அடங்கியதும் நறுக்கின கேரட்,
பீன்ஸ், குடை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
6. காய்கறி கலவையுடன் மஞ்சள் தூள், மிளகாய்
தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கி விடவும்.
7. அதன் பின்னர் எல்லாம் சேர்ந்து சிறிது நேரம்
வதங்கியதும் சிக் பீஸ் போட்டு கிளறி விடவும்.
8 . அதனுடன் பரோட்டா துண்டுகளையும் சேர்த்து
தேவையான அளவு உப்பு போட்டு நன்கு பிரட்டி
விடவும்
9. சுவையான ஃப்ரைட் சில்லி பரோட்டா ரெடி.
பரிமாறும் போது மேலே கொத்தமல்லி தழை
தூவவும். இதை வெங்காய பச்சடியுடன் சேர்த்து
பரிமாறலாம்.
Comments
Post a Comment